காற்றின் மொழி பாடல் போட்டியின் முதல் சுற்று தேர்வு முடிவு

kaatrin mozhi competition (1)

36 வயதினிலே, மகளிர் மட்டும் படங்களை தொடர்ந்து ஜோதிகாவின் தனித்துவமான நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘காற்றின் மொழி’. இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள காற்றின் மொழி படத்தின் படக்குழுவினர் கடந்த விநாயகர் சதூர்த்தி பண்டிகையை முன்னிட்டு ‘காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி’யை அறிவித்தனர்.

பாடல் எழுத தெரிந்தவர்கள் , சினிமாவில் பாடல் எழுதுவதை கனவாக கொண்டவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய திறமையை வெளிக்காண்பிக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

மேலும் சிறந்த பாடல்கள் இரண்டை எழுதுபவர்களை மதன் கார்க்கி தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாடல்களும் மக்கள் முன்னால் பாடப்பட்டு எழுதியவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்றெல்லாம் அதில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்தவகையில் இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்துகொண்டு பாடல்களை எழுதி அனுப்பியுள்ளனர். இவற்றில் பொருத்தமான பாடல்களை எழுதிய 66 பேர் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்காளில் இருந்து அடுத்தகட்டமாக 2 பேர் தேர்வு செய்யப்பட இருகின்றனர்.