காலா டீசர் நாளை வெளியாகிறது..!

kaala teaser release 1

ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி திருவிழாவாக உருவாகியுள்ள படம் காலா’.. இந்தப்படம் வரும் ஏப்-27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதன் டீசரை இன்று வெளியிட தீர்மானித்திருந்தார் தயாரிப்பாளர் தனுஷ்.

ஆனால் காஞ்சி பெரியவர் ஜெயேந்திரர் திடீரென காலமானதால், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக டீசர் வெளியீட்டை ஒருநாள் தள்ளி வைத்து நாளை (மார்ச்-2) ஆம் தேதி வெளியிடுகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே கபாலி டேசரில் கதிகலக்கியவர் என்பதால் எதிர்பார்ப்பு இந்தமுறை இரட்டிப்பாகி இருக்கிறது.

ஏற்கனவே காலா படத்தில் பஞ்ச் வசனங்கள் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஹைலைட்டாக்கும் விதமாக இருபதாக செய்திகள் கசிந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமான எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.