ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ‘காலா’ செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

kaala 2nd look

‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் படம் காலா. ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். மும்பையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு காலா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வருடம் ரஜினி படம் எதுவும் வெளியாகாத நிலையில் அடுத்த வருடம் ‘2.O’ மற்றும் ‘காலா’ என ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரபோகிறார் சூப்பர்ஸ்டார்.