ஜூன்-7ல் ‘காலா’ ரிலீஸ்..!

kaala release

ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் கபாலியை தொடர்ந்து அதிரடி படமாக உருவாகியுள்ளது காலா. இந்தப்படம் ஏப்-27ஆம் தேதி ரிலீசாகும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.. ஆனால் இடையில் திரையுலகில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, சுமார் ஒன்றை மாதங்களுக்கு மேலாக புதிய படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அதனால் அந்த சமயத்தில் தங்களது ரிலீஸை திட்டமிட்டு வைத்திருந்த படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தற்போது ரிலீஸ் தேதிகள் வழங்கப்பட இருக்கின்றன. அதனால் சீனியாரிட்டி அடிப்படையில் ‘காலா’ படத்திற்கு மறு தேதி அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதையடுத்து வரும் ஜூன்-7ல் ‘காலா’ ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.