மே-9ல் காலா இசை வெளியீட்டு விழா

kaala audio release

பா.ரஞ்சித் டைரக்சனில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. இந்த படத்தில் ரஜினிகாந்த் திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று வசிக்கும் தாதா கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பை தாராவி பகுதியில் நடத்தி முடித்தனர்.

இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியூமா குரோஷி நடித்துள்ளார்.. சமுத்திரக்கனி, சம்பத், நானா படேகர், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்க நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஸ்ட்ரைக் காரணமாக கடந்த ஏப்-27ஆம் தேதி ரிலீஸாக இருந்த காலா படம் வரும் ஜூன்-7ஆம் தேதி ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரும் மே-9ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் நாளை (மே-1) உழைப்பாளர் தினத்தை கொண்டாடும் விதமாக இந்தப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாக இருக்கிறது.