டொராண்டோ பிலிம் பெஸ்டிவலில் இடம்பிடித்த ‘காக்கா முட்டை’..!


தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காக்கா முட்டை’. இந்தப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் மணிகண்டன் இயக்கியுள்ளார். ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ புகழ் ஐஸ்வர்யா கதையின் நாயகியாக நடிகக, மற்றும் புதுமுகங்கள் பலர் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சேரியில் வாழும் குழந்தைகளின் இருப்பிடம் மற்றும் அவர்களது வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாராகியுள்ளது. இப்போது இந்தப்படம் டொராண்டோ பிலிம் பெஸ்டிவலில் இடம்பிடித்திருக்கிறது. இந்த விழா செப்-4ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.