‘காக்கா முட்டை’ இப்போ பொன்முட்டையாச்சு’..!

 

தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காக்கா முட்டை’. மேமாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப்படத்திற்கு தற்போது  குழந்தைகளுக்கான சிறந்த படம் வரிசையிலும் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் (விக்னேஷ், ரமேஷ்) வரிசையிலும் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.  ஏற்கனவே பிலிம் பெஸ்டிவல்களில் கலக்கிய படம் தான் இந்த ‘காக்கா முட்டை’. இப்போது தேசிய விருது பெற்றதன் மூலம் பொன்முட்டையாக நிறம் மாறியிருக்கிறது

இந்தப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் மணிகண்டன் இயக்கியுள்ளார். ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ புகழ் ஐஸ்வர்யா கதையின் நாயகியாக நடிக்க, மற்றும் புதுமுகங்கள் பலர் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சேரியில் வாழும் குழந்தைகளின் இருப்பிடம் மற்றும் அவர்களது வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாராகியுள்ளது.