ஜூலை-24ல் ‘மாயா’ ரிலீஸ்..!

 

கடந்த வருடத்தில் நயன்தாரா நடித்த இரண்டே படங்கள் மட்டும் வெளியான நிலையில், இந்த வருடத்தின் ஆறு மாதங்களில் நயன்தாரா நடித்த மூன்று படங்கள் ரிலீஸாகியுள்ளது ஆச்சர்யமான ஒன்று தான். அந்த வரிசையில் தற்போது நான்காவதாக, நயன்தாரா நடித்துள்ள ஹாரர் த்ரில்லர் படம் தான் ‘மாயா’.

‘நெடுஞ்சாலை’ ஆரி கதாநாயகனாக நடிக்க, ‘கள்ளப்படம்’ லட்சுமி ப்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படத்தை அஸ்வின் சரவணன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்தப்படம் வரும் ஜூலை-24ல் ஜூலை-24ல் ரிலீசாகிறது.