எளிய மனிதர்களின் அரசியலை பேசவரும் ‘ஜோக்கர்’..!

joker

குக்கூ படத்தை இயக்கிய ராஜூ முருகனின் அடுத்த படமாக உருவாக்கி வருகிறது ‘ஜோக்கர்’. குக்கூ படத்தில் பார்வையற்ற இரண்டு இளம் உள்ளங்களின் காதலை சொல்லி நெகிழ வைத்த ராஜூ முருகன் இந்தப்படத்தில் எளிய மனிதர்களின் அரசியலை பொட்டில் அடித்தாற்போல சொல்ல இருக்கிறாராம்.

ஆரண்ய காண்டம்’ மற்றும் ‘ஜிகர்தண்டா’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த சோமசுந்தரம் என்பவர் இந்தப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். நாயகிகளாக புதுமுகங்கள் காயத்ரி மற்றும் ரம்யா நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவனுக்கு அவனுடைய வீட்டில் குடிப்பதற்கே அழுக்கு தண்ணீர் தான் என்கிற நிலை வரும்போது அவன் இந்த சமூக அரசியளில் தனது கோபத்தை காட்டுகிறான் என்பதுதான் கதையாம். படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனவாம்.