படைப்பாளிகளின் சுதந்திரத்திற்கான புதிய வாசலை திறந்துவிட்ட ‘ஜோக்கர்’..!

Joker-Tamil-Movie

சமூக வலைதளங்களில் குறிப்பாக சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் சாட்டையடி வசனங்கள் அனைத்தையும் தொகுத்து ஒரு பதிவு அதிக நபர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.. ஆளும் அரஸின் மெத்தனப்போக்கையும் எதேச்சதிகாரத்த்தையும் கண்டிக்கும் அந்த வசனங்கள் ரசிகர்களிடம் மட்டுமல்ல, திரையுலகை சேர்ந்த படைப்பளைகளிடமும் கூட ‘அட இப்படி வசனம் எழுதினால் கூட சென்சார் அனுமதிக்கிறார்களா.. பரவாயில்லையே” என புத்ஹிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

“படைப்பாளிகளுக்கு ‘ஜோக்கர்’ திரைப்படம் கண்டிப்பாக ஒரு துணிவைக் கொடுத்திருக்கிறது. ‘யார் என்ன சொல்வார்களோ’ என்று பயப்படாமல் இனி வசனம் எழுதுவார்கள்’’ என்கிறார் படத்தின் இயக்குநர் ராஜுமுருகன். அதைவிட இப்படிப்பட்ட வசனங்களை கொண்ட படத்தை, எங்கே ரிலீஸாக விடாமல் தடுத்து விடுவார்களோ என்கிற பயம் இல்லாமல் தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபுவின் துணிச்சலை பாராட்டித்தான் ஆகவேண்டும்.