‘ஜோக்கர்’ மன்னர் மன்னனின் புதிய உத்தரவு..!

joker-new order

சமீபத்தில் வெளியான ‘ஜோக்கர்’ படத்தில் தன்னை ஜனாதிபதி என கூறிக்கொண்டு உத்தரவுகளை பிறப்பித்து அதிரடி பண்ணும் கேரக்டரும் அந்த கேரக்டரில் நடித்திருந்த குரு சோமசுந்தரமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார்கள்.. இந்த வரவேற்பை படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைக்காக வித்தியாசமாக பயன்படுத்தியுள்ளார்கள்.

அதாவது படத்தில் ஜனாதிபதி போல உத்தரவு போட்ட மன்னர் மன்னன் கேரக்டர் நிஜத்திலும் ஒரு உத்த்தரவை அமல்படுத்தி இருப்பதாகவும், அதன்படி இந்த ஜோக்கர் படத்தை திருட்டு விசிடியிலோ அல்லது இணையதளத்திலோ தரவிறக்கம் செய்து பார்க்க கூடாது என்றும், அப்படி பார்த்தால் அதற்கான நியாயமான தொகையை படத்தின் தயாரிப்பாளரான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் செலுத்துமாறும் மன்னர்மன்னனின் உத்தரவை அதில் வேண்டுகோள் பாணியில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இப்படி நீங்கள் அனுப்பும் பணத்தில் கழிப்பறை வசதி இல்லாத அப்பாவி மக்களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுப்பதற்காக செலவிடப்படும் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.