கோடை விடுமுறையில் ‘கொரில்லா’ தாக்குதலுக்கு தயாராகும் ஜீவா..!

gorilla

ஜீவாவுக்கு இது உற்சாகமான மாதம் என்றே சொல்லவேண்டும். அவர் நடித்துள்ள கீ, கலகலப்பு-2’ ஆகிய படங்கள் இந்த மாதம் ரிலீசுக்கு தயாராக இருக்க, அவர் நடிக்க உள்ள புதிய படமான ‘கொரில்லா’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பாண்டிச்சேரியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்க முக்கிய வேடங்களில், ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியிருக்கிறது. தற்போது பாண்டிச்சேரியில் துவங்கியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு, இதனை தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் தொடரவிருக்கிறது.

ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கோடை விடுமுறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ‘கொரில்லா’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது