டீகே இயக்கத்தில் இணையும் ஜீவா-சிம்ஹா..?

 

யாரோ ஒரு புது இயக்குனர் இயக்கியுள்ள ஒரு சாதாரண படம் என்கிற அளவில் மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, கடந்த வருடம் வெளியான ‘யாமிருக்க பயமே’ படம் அப்படி ஒரு வெற்றிபெரும் என்பது யாருமே எதிர்பாராதது. அறிமுக இயக்குனர் டீகே இயக்கிய இந்தப்படம் கடந்த வருடத்தின் மிகச்சிறந்த வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. அதை தொடர்ந்து தற்போது தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட்டை முடித்துவிட்டார் டீகே..

இந்தப்படத்தில் கதாநாயகனாக ஜீவா ஹீரோவாக நடிக்கிறார் என சொன்னால்  ஒரு சாதாரண செய்தியாக போய்விடும். டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக உருவாகியுள்ள இந்த கதையில் பாபி சிம்ஹா இன்னொரு ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்பதுதான் படத்தின் ஹைலைட்.. இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் தரும் படமாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.