இரண்டு ஹீரோயின்கள் கிடைத்துவிட்டதால் இனி ஜீவாவுக்கு ‘கவலை வேண்டாம்’..!

தமிழ்சினிமாவை சமீபகலாமாக மையம் கொண்டிருக்கும் இரு மலையாள இளம்புயல்கள் தான் நிக்கி கல்ராணி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும். இதில் நிக்கி கல்ராணி ‘டார்லிங்’ மூலமாக ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துவிட்டார் என்றால், கீர்த்தி சுரேஷோ இன்னும் படம் எதுவும் வெளியாகாத நிலையிலேயே தமிழில் நான்கு படங்களுக்கு மேல் நடித்துகொண்டு இருப்பதோடு, விரைவில் ரசிகர்களை வசீகரிக்க வருகிறார்..

தற்போது ‘யாமிருக்க பயமே’ வெற்றிப்படத்தை தொடர்ந்து, ஜீவாவை வைத்து டீகே இயக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தில் நிக்கி, கீர்த்தி சுரேஷ் இருவருமே கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். பாபி சிம்ஹா குறிப்பிடும்படியான கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்தப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்களான எல்ரெட் குமாரும் ஜெயராமனும் தயாரிக்கிறார்கள்.