எட்டு வருடங்களுக்குப்பின் இணையும் ‘ஈ’ ஜோடி..!

‘யான்’ படத்திற்குப்பின் தனது புதிய படம் குறித்து மௌனம் காத்துவருகிறார் ஜீவா.. ஆனால் இப்போது அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் கசிந்துள்ளது.. இந்தப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. ஆச்சர்யமான விஷயமாக 2௦௦6ல் வெளியான ‘ஈ’ படத்தை தொடர்ந்து இருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

ராம்நாத் என்பவர் இயக்கும் இந்தப்படம், ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’ மாதிரி பக்கா காமெடி சப்ஜெக்ட்டாம். ஜீவாவும் ‘ஒரு குவார்ட்டர் சொல்லு மச்சி’ என்கிற ரேஞ்சில் படு லோக்கலாக நடிக்க இருக்கிறாராம். வரும் டிசம்பர் மாதத்தில் தொடங்க இருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. ‘