இந்தியில் கால் பதித்த ஜீவா

சங்கிலி புங்கிலி கதவ தொற, கலகலப்பு-2 என ஓரளவுக்கு வெற்றி படங்களில் கொடுத்த தெம்பில் இருக்கும் ஜீவா, தற்போது ஜிப்ஸி, கீ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தியில் அடியெடுத்து வைக்கிறார் ஜீவா. படத்தின் பெயர் 1983 வேர்ல்ட் கப். மல்டி ஸ்டாரர் மூவியாக உருவாகும் இந்த படத்தில் ரன்வீர் சிங் கதாநாயனாக நடிக்கிறார்.

கிட்டதட்ட 100 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக இந்த படம் எடுக்கப்படுகிறது கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான எனக்கு இப்படி ஒரு படத்தில் அதுவும் இந்தியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய சந்தோஷம் என்கிறார் ஜீவா.

இவர் யார் கேரக்டரில் நடிக்கிறார் என கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் தான் ஜீவா நடிக்கிறார் படத்தின் ஷூட்டிங் வரும் மே மாதம் லண்டனில் துவங்க உள்ளது இனிமேல் தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் யானையின் தடம் மாதிரி அழுத்தமாக பதியும் அளவுக்கு இருக்கும் என்கிறார் நம்பிக்கையுடன் ஜீவா.