மே-23ல் ‘ஜிகர்தண்டா’ ரிலீஸ்..!

அமைதியாக வெளிவந்து அதிரடியாக ஹிட்டான ‘பீட்சா’ படத்தை டைரக்ட் பண்ணிய கார்த்திக் சுப்பராஜ் இப்போது இயக்கியுள்ள படம் தான் ‘ஜிகர்தண்டா’. மதுரை பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் சித்தார்த் ஹீரோவா நடிக்க, அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருக்கிறார்.

வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் எல்லோராலும் கவனிக்கத்தக்கவராக மாறியுள்ள சந்தோஷ் நாராயணன் தான் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார். ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின்மூலம் தனக்கு கிடைத்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக இந்தப்படத்தில் கார்த்திக் சுப்பராஜுடன் சேர்ந்து தீயாக வேலை செய்திருக்கிறார் சித்தார்த்.

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் வில்லனாக வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டியுள்ளாராம் நம் ‘வட்டிராஜா’வான சிம்ஹா. ‘ஜிகர்தண்டா’ படத்தை கோடை வெயிலுக்கு குளிர்ச்சி பானமாக தரும் விதமாக வரும் மே-23ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள்.