நந்தா பெரியசாமி டைரக்ஷனில் விஜய் வசந்த் நடிக்கும் ‘ஜிகினா’..!

இயக்குனர் நந்தா பெ‌ரியசாமியின் முதல் படம் ஒரு கல்லூ‌ரியின் கதை. ஆர்யா, சோனியா அகர்வால் நடித்த இந்தப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிபெறவில்லை. இந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து அவர் இயக்கிய படம் தான் ‘மாத்தியோசி’. ஓரளவு வரவேற்பு பெற்ற இந்தப்படத்தில் திருட்டு, கொலை, கொள்ளை என இறுக்கமான சப்ஜெக்டை டீல் செய்த நந்தா பெ‌ரியசாமியின் மூன்றாவது படமான ‘அழகன் அழகி’யும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

ஆனால் அதிர்ஷடம் ராகுல் பிக்சர்ஸ் கே.டி.கே மூலமாக நந்தா பெ‌ரியசாமியின் வீட்டுக்கதவை தட்டி அவருக்கு அடுத்த பட வாய்ப்பை வழங்கியிருக்கிறது. படத்தின் பெயர் ஜிகினா. இந்தப்படத்தில் விஜய்வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.. சானியா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை இயக்குனர் லிங்குசாமி ஸ்டார்ட் ஆக்ஷன் சொல்லி துவக்கி வைத்தார்..

மேலும் இந்தப்படத்தில் கும்கி அஸ்வின், சிங்கம்புலி ஆகியோருடன் சின்னத்திரையில் புகழ்பெற்ற நட்சத்திரம் ஒருவரும் நடிக்க இருக்கிறாராம். பாடல்களை யுகபாரதி எழுத ஜோன் என்கிற அறிமுக இசையமைப்பாளர் இந்தப்படத்திருக்கு இசையமைக்கிறார்.