ஜெமினி கணேசனும் துல்கர் சல்மானும் பின்னே அனுஷ்காவும்..!

anushka in savithri

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், 1950-60களில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை ‘மகாநதி’ என்ற பெயரிலேயே படமாக்கவுள்ளனர். நாக் அஷ்வின் இயக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. படத்தில் நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தநிலையில் சாவித்ரியின் தோழியாக விளங்கிய ஜமுனா என்கிற கதாபாத்திரமும் படத்தில் இடம்பெறுவதாகவும் அந்த கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்கவைக்க முயற்சி நடப்பதாகவும் செய்தி ஒன்று கசிந்துள்ளது.

இப்போது படத்தின் கதாநாயகனாக ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருகிறார். இன்றைய இளம் நடிகர்களில் ஜெமினியின் ரோலுக்கு பொருத்தமானவராக இவர் இருப்பதாலும் துல்கர் சல்மானை இந்த கேரக்டருக்கு தேர்வு செய்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது..