நிஜ ரவுடிகளுடன் படமாக்கப்பட்ட ஜீவா பட சண்டைக்காட்சி..!

கிட்டத்தட்ட 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்தும் ரௌடி கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக  ஜீவா இப்போது வேறொரு தோற்றத்தில் ஆளே மாறியிருக்கிறார். எல்லாம் தற்போது அவர் நடித்துவரும் ‘திருநாள்’ படத்திற்காகத்தான்.

‘ஈ’ படத்திற்குப் பிறகு ஜீவாவுடன் மீண்டும் நயன்தாரா இணைகிறார்.  இவர்களுடன் ‘பாண்டியநாடு’ வில்லன் சரத்லோகித்தவா, கருணாஸ், மீனாட்சி, ஜோமல்லூரி, கோபிநாத் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ‘திருநாள்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் கும்பகோணம் நகர தெருக்களின் வழியாக ஜீவா ரௌடிகளை துரத்தும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது, நிஜமாக இரண்டு ரௌடி கோஷ்டிகளுக்குள் அதே பகுதியில் சண்டை நடக்க, படக்காட்சியோடு நிஜ ரௌடிகளின் சண்டையும் சேர்த்து தத்ரூபமாக படமாக்கி விட்டார்களாம். இது எப்டி இருக்கு..?.