ஜீவா ஜோடியாக கீர்த்திசுரேஷ் ; எல்ரெட் குமாருக்கு இனி ‘கவலை வேண்டாம்’.

 

 ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே தன் அடுத்த படத்திற்கு ‘கவலை வேண்டாம்’ என டைட்டில் வைத்திருக்கிறார். ஜீவா இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் உருவாக இருக்கிறது. இதில் பாபி சிம்ஹா கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

இதில் ஜீவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏற்கனவே மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் இவருக்கு அவை வெளியாகும் முன்னரே கிடைத்துள்ள நான்காவது படம் இது. எல்ரெட் குமார் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

தனக்கு ‘யாமிருக்க பயமே’ படம்  மூலம் கிடைத்த அறிமுகம் கொடுத்த எல்ரெட் குமாருக்கு நன்றிக்கடனாக டீகேவும், தான் நடித்த ‘யான்’ படத்தின் தோல்வியால் துவண்ட, அதே எல்ரெட் குமாருக்கு பிராயச்சித்தமாக உதவும் வகையில் ஜீவாவும் இந்தப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.