ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை..!

jayam-ravi-al-vijay-film

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் ‘தேவி’ படத்தை முடித்து ரிலீஸுக்கு தயாராக வைத்துவிட்டார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.. அடுத்ததாக ஜெயம் ரவியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.. அடுத்தடுத்து இரு படங்கள் ஜெயம் ரவிக்கு காத்திருந்தும் கூட முதலில் விஜய் படத்தை தொடங்க சொல்லிவிட்டார் ஜெயம் ரவி.. இந்தப்படத்திற்கான பூஜையும் போட்டாகி விட்டது.. இந்தமுறை ஹாரிஸ் ஜெயராஜுடன் முதல்முறையாக இசைக்கூட்டணி அமைத்துள்ளார் ஏ.எல்.விஜய்.

இந்தப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை சாயிஷா சைகல் என்பவர் நடிக்கிறார்.. ஒருகாலத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டாராக கொடிகட்டி பறந்த நடிகர் திலீப்குமாரின் பேத்திதான் இவர்.. இந்தியில் ஒரு படத்தில் நடித்த கையோடு இரண்டாவது படத்தில் தமிழுக்கு வந்துவிட்டார்.