டார்ஜானாக மாறிய ஜெயம் ரவி..!

vanamagan 1

டார்ஜான் கதைகளை படிக்காதவர்களும், டார்ஜான் படங்களை பார்க்காதவர்களும் யாராவது இருப்பார்களா என்ன..? தற்போது கானக வீரன் டார்ஜானை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வேளைகளில் இறங்கியுள்ளார் ஜெயம் ரவி…. ஆம்.. ‘போகன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சக்தி செளந்தரராஜன் இயக்கும் ‘டிக் டிக் டிக்’ மற்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘வனமகன்’ என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி.

இதில் விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘வனமகன்’ படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள அடர்ந்த காடுகளுக்குள்ளும், சென்னையில் சில முக்கிய காட்சிகளும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. ‘பேராண்மை’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

இந்தப்படத்தில் சாயிஷா சைகல் நாயகியாக நடித்து வருகிறார். திரு ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டுள்ளார்கள்.. இந்தப்படத்தில் மரத்தின் விழுதை பிடித்து தொங்கியபடி ஜெயம்ரவி இருப்பதை பார்க்கும்போது டார்ஜான் ஞாபகம் நமக்கு தோன்றாமல் போகாது.