‘ஏமாலி’ பட டீசரை வெளியிட்டார் ஜெயம் ரவி..!

‘6 மெழுகுவர்த்திகள்’ என்கிற நெகிழ்ச்சியான, விழிப்புணர்வு தரக்கூடிய படத்தை தொடர்ந்து வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘ஏமாலி’.. பொதுவாக ‘ஏமாளி’ என்கிற வார்த்தையைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ‘ஏமாலி’ என பெயர் வைத்திருக்கிறார் என்றால் அதில் ஏதோ விஷயம் இருக்கத்தான் செய்யும்.

இதில் சமுத்திரக்கனி தான் கதையின் நாயகனாக நடிக்கிறார்.. தவிர. புதுமுகம் சாம் ஜோன்ஸ் இதில் அறிமுக நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்தப்படத்தின் டீசரை ஜெயம் ரவி வெளியிட்டார். டீசரை பார்க்கும்போது இந்தப்படத்தில் கார்ப்பரேட் லுக்கிலான புதிய சமுத்திரக்கனியை நாம் பார்க்க முடிகிறது. இளைஞர்களின் சமகால உளவியல் பிரச்சனைகளை முன் வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது என்றே தோன்றுகிறது.