ஒரே தயாரிப்பு நிறுவனத்தில் மூன்று படங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி

jayam ravi

தனக்கான கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அதேபோல ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் தரமான படங்களை தயாரிப்பதே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது அதனாலோ என்னவோ இந்த நிறுவனம் அடுத்தடுத்து தயாரிக்கும் மூன்று படங்களில் நடிப்பதற்கு ஜெயம் ரவி ஒப்புக்கொண்டுள்ளார்..

இந்த நிறுவனம் ஜெயம்ரவியை வைத்து தயாரிக்கும் மூன்று படங்களின் இயக்குனர்களுமே ஜெயம் ரவிக்கான அற்புதமான கதைகளை தயார் செய்து வைத்துள்ளார்கள். தற்போது படங்களை பற்றிய விவாதம் நடந்து வருவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி