ஜெயம்ரவிக்கு அரவிந்த் சாமி..! சிவகார்த்திகேயனுக்கு சமுத்திரக்கனி..!!

ஒரு படத்தை பொறுத்தவரை கதையும் படத்தில் வில்லனாக நடிப்பவரும் படத்துக்குப்படம் புதிதாக இருக்கவேண்டும். அப்போதுதான் ஹீரோயிசம் எடுபடும். ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். குணச்சித்திர நடிகராக, தன்னம்பிக்கை தரும் கதாபாத்திரங்களில் மட்டுமே  நடித்து வந்த இயக்குனர் சமுத்திரகனியை, மீண்டும் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்தமாதிரி வில்லனாக  மாற்றி இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடிக்க, பொன்ராம் இயக்கும் படத்தில் தான் அவருக்கு இந்த வில்லன் வேடம்..

அதேபோல சில மாதங்களுக்கு முன்னே அஜீத் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என செய்திகள் வெளியானபோது மீடியாக்களிடம் அப்படியெல்லாம் இல்லை என கோபப்பட்ட தொண்ணூறுகளின் சாக்லேட் ஹீரோவான அரவிந்த்சாமி தான் இப்போது வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டிருகிறார். ஆனால் அஜித்துக்கு அல்ல.. ஜெயம் ரவிக்கு.. ஜெயம் ராஜா இயக்கும் ‘தனி ஒருவன்’ படத்தில் தான் வில்லனாக நடிக்கிறார் அரவிந்த்சாமி.