‘ஜருகண்டி’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்..!

jarugandi 1

‘பலூன்’ படத்தின் மூலம் வெற்றியை சுவைத்துள்ள ஜெய்யின் அடுத்த படமான ‘ஜருகண்டி’ படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கிவருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படத்தின் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடிக்கின்றார். ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஜருகண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸால் ரிலீஸ் செய்யப்பட்டது.

“நல்ல படங்களை என்றுமே பாராட்டி ஆதரவு தரும் ஏ.ஆர்.முருகதாஸ் எங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. எங்கள் படத்தின் 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஒரு தயாரிப்பாளராக இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்”’ என நிதின் சத்யா பெருமையுடன் கூறினார்.