ஜனவரி-1௦ல் அருள்நிதி பட ட்ரெய்லர் ரிலீஸ்..!

iravukku aayiram kankal.jpg trailer release

பொதுவாகவே சிறந்த நடிகரான அருள்நிதியின் படங்களை தொடர்ந்து கவனிக்கும் ரசிகர்களும் சரி, திரையுலகினரும் சரி, அவருடைய கதை தேர்வு, கதாபாத்திர தேர்வு ஆகியவற்றை பாராட்டவே செய்கிறார்கள். அந்தவகையில் அவருடைய அடுத்த ரிலீஸான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படமும் முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.

கதாநாயகியாக மஹிமா நம்பியார் நடிக்க, அஜ்மல், ஆடுகளம் நரேன், ஜான் விஜய், ஆனந்தராஜ், ஆடுகளம் முருகதாஸ், சாயாசிங் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். பத்திரிக்கையாளர் பின்னணியிலிருந்து வந்திருக்கும் மாறன் என்பவர் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு படத்தை தயாரித்திருக்கிறார்.

கால் டாக்ஸி டிரைவரான அருள்நிதி ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்ள, அதை தொடர்ந்து எதிர்பாராத களத்தில் திரைக்கதை பயணிக்கும். அதை தொடர்ந்து நடக்கும் விஷயங்கள், எங்கு போய் முடிகிறது என்பதே திரைக்கதையின் முடிச்சு. படத்தின் ஹைலைட்டே திரைக்கதை தான். சரியான இடங்களில் திருப்பங்கள் அமைந்திருக்கும். ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் அனுபவமாக இருக்குமாம். இந்த மொத்த படத்தின் கதையும் இரவில் நடக்குமாறு திரைக்கதை அமைந்திருக்கிறது. ரொம்பவே கஷ்டமான ஒரு கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பாக நடித்திருக்கிறாராம்.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் வரும் ஜன-1௦ஆம் தேதி வெளியாக இருக்கிறது.