தை-1 ‘கமலுக்கு’ ; மே-1 ‘ரஜினிக்கு – சிவகார்த்திகேயன் சென்டிமென்ட் பிளான்..!

 

சிவகார்த்திகேயன் அப்படி ஒன்றும் பெரிய மாஸ்டர் பிளான் எல்லாம் போடவில்லை.. எதேச்சையாக அமைந்தது தான். சிவகார்த்திகேயனுக்கு அவரது கேரியரில் சூப்பர் வெற்றிகளை தந்ததில் ‘எதிர் நீச்சல்’ டீமும், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ டீமும் மிக முக்கியமானவை..

கமல் நடித்த சூப்பர்ஹிட் படமான ‘காக்கி சட்டை’ படத்தின் தலைப்பு அவருக்கு கிடைத்து ஒரு அதிர்ஷ்டம் என்றால், தயாரிப்பாளராக தனுஷ், இயக்குனர் துரை செந்தில்குமார், சிவகார்த்திகேயன், அனிருத் என ‘எதிர்நீச்சல்’படத்தின் டீம் அப்படியே இந்த ‘காக்கி சட்டை’யிலும் இணைந்திருப்பது இன்னொரு அதிர்ஷ்டம்.

கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, இளையதிலகம் பிரபு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வெளியிடுகிறார். முக்கியமான விஷயம், பொங்கலுக்கு பெரிய படங்கள் வெளியாவதால் ரிலீஸை தள்ளிவைக்கலாமா என யோசித்துவந்த ‘காக்கி சட்டை’ டீம் இப்போது சூழல் மாறியுள்ளதால் பொங்கலுக்கே படத்தை ரிலீஸ் செய்யும் வேளைகளில் இறங்கியுள்ளது.

அதேபோல ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் தான் ‘ரஜினி முருகன்’ சிவகார்த்திகேயன் இயல்பிலேயே ரஜினி ரசிகர்… அதற்கேற்ற மாதிரி இப்போது இந்தப்படத்தில் ரஜினி ரசிகராக வேறு நடிக்கிறார்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மூலம் சூப்பர்ஹிட்டான பாடல்களை கொடுத்த இமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்த ‘ரஜினி முருகன்’ படத்தை மே-1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம். காரணம் 2௦12ல் இதே தேதியில் சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர் நீச்சல்’ வெளியாகி வெற்றி பெற்றது என்கிற சென்டிமெண்ட் தான். அதாவது… இப்ப டைட்டிலை மீண்டும் ஒரு தடவை படியுங்க..