பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாடிய லாரன்ஸ்..!

lawrence - jallikkattu

சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது யோகேந்திரன் மற்றும் மணிகண்டன் என்கிற இரு இளைஞர்கள் போராட்டத்தின் போது மரணம் அடைந்து விட்டார்கள்.. அந்த இருவரின் குடும்பங்களுக்கு தான் ஒரு மகனாக இருந்து அந்த குடும்பத்தின் குழந்தைகள் படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும், அவர்களுக்கு வீடு கட்டி தருவதாகவும் கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்..

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை மாணவர்களுடன் சேர்ந்து கொண்டாடினார் லாரன்ஸ்.. இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 1200 கிலோ பிரமாண்டமான கேக்கை வெட்டி கொண்டாடினார்கள். இதற்கு முன்பு 1040 கிலோ கேக் தான் உலக சாதனையாக பதிவானது ..அதை முறியடிக்கும் விதமாக 1200 கிலோ அளவில் கேக்கை வெட்டி கொண்டாடி சாதனை படைத்துள்ளனர்.

இந்த நிகழ்வின்போது பேசிய லாரன்ஸ், பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த கேக்கை வெட்டுவது தான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும்..அவர்கள் ஆன்மாவுக்கும் சாந்தி கிடைக்கும் என்று பேசினார். அதன்படி அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் கேக் வெட்டினர்