பேயுடன் போராட கிளம்பிய ‘ஜாக்சன் துரை’…!

யெஸ்.. சினிமாவில் எந்த ரூட்டில் போகவேண்டும் என்கிற சூட்சுமத்தை ‘நாய்கள் ஜாக்கிரதை’ மூலம் கற்றுக்கொண்டுவிட்டார் சிபிராஜ். குறிப்பாக குழந்தைகளை கவரும் வித்தையை புரிந்துகொண்டார். அதனால் தான் நிதானமாக ஆறுமாதம் காத்திருந்து தனது அடுத்த படத்தை ஆரம்பித்திருக்கிறார். போனமுறை அவரது உதவிக்கு வந்தது நாய் என்றால் இந்தமுறை அவருக்கு துணைக்கு வருவது ‘பேய்’.

ஆம்.. சிபிராஜ் அடுத்து நடிக்க உள்ள ‘ஜாக்சன் துரை’ காமெடி கலந்த பேய்ப்படமாக உருவாக இருக்கிறது. 100 வருடமாக ஒரு பேயிடம் சிக்கி தவிக்கும் கிராமத்தை காப்பாற்ற ஒரு போலீஸ் அதிகாரி அந்த ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் கதை.

 

கார் திருட்டை மையப்படுத்தி ‘பர்மா’ படத்தை இயக்கி ஆச்சர்யப்படுத்திய தரணீதரன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். அதுமட்டுமல்ல சத்யராஜ் இந்தப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். விபின் சித்தார்த் இசையமைக்கும் இந்தப்படத்தை ‘சலீம்’ படத்தை தயாரித்த  ஸ்ரீ கிரீன் மூவிஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரிக்கிறார்.