விமலுக்கு உடம்பெல்லாம் மச்சம் – மன்சூர் அலிகான் கலாட்டா..!

iemi audio

விமல் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். முதல் முறையாக ஆங்கில நடிகை மியா ராய் ‘கன்பைட் காஞ்சனா’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ள இந்தப்படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முகேஷ்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஆனந்தராஜ், “இந்த படத்தை பாருங்கன்னு சொன்னா நான் ஒரு முட்டாள்.. கரணம் இந்தப்படம் அதுவாகவே ஓடும். இந்தப்படத்திற்கு பின் விமல் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாகிவிடுவார். உண்மையிலேயே விமலுக்கு உடம்பெல்லாம் மச்சம் என்றுதான் சொல்லவேண்டும்” என கலகலப்பூட்டினார்..

இந்த படம் பற்றி இயக்குனர் பேசும்போது… ‘இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்.. சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்..இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும்.

அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர்…அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம். கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம்” என்கிறார் ஏ.ஆர்.முகேஷ்.

இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்களும் சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்களும் நடைபெற்றது.