இவன் தந்திரன் டீசரை வெளியிட்டார் மணிரத்னம்..!

manirathnam - ivan thanthiran 1

மினிமம் கியாரண்டி இயக்குனர் என அறியப்படும். தற்போது இவர் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ‘இவன் தந்திரன்’ என்கிற படத்தை இயக்கிவருகிறார். கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, முக்கிய வேடத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார்..

இன்று காலை இந்தப்படத்தின் டீசரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். கண்ணன் மணிரத்னத்தின் சீடர் என்பதும் இந்தப்படத்தின் கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் மணிரத்னம் இயக்கிவரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.