இஸ்பேட் ராஜாவாக மாறிய ஹரீஷ் கல்யாண்

ispet rajavum idhaya raniyum

பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யான் நடித்து சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அவரை தேடி வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இந்தநிலையில் அவர் தற்போது ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பாக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு முக்கிய காரணம் இந்தப்படத்தை இயக்கிவரும் ரஞ்சித் ஜெயக்கொடி தான் விஜய்சேதுபதியின் ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கியவர்

இந்தப்படத்தில் ஹரீஷ் கல்யான் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.