“ஷாருக்கான் போல இந்திய அளவில் ஹரிஷ் கல்யாண் புகழ் பெறுவார்’ ; பொன்வண்ணன் பாராட்டு

harish kalyan (1)

பிக் பாஸ் சீசன்-2 மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹரிஷ் கல்யாணுக்கு பியார் பிரேமா காதல் என்கிற படம் வெற்றியை கொடுத்து ஒரு கதாநாயகனுக்கான அந்தஸ்தையும் கொடுத்தது. இதையடுத்து தற்போது இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் ஹரிஷ் கல்யாண். விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் என்கிற படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

காளி படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷில்பா மஞ்சுநாத் இதில் கதாநாயகியாக நடிக்க, பொன்வண்ணன், பாலசரவணன் மற்றும் மாகாபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் மார்ச் 15-ம் தேதி இந்த படம் ரிலீஸாவதை முன்னிட்டு இந்த படத்தின் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன், “ஹரிஷ் கல்யாணை பார்க்கும்போது அவர் தமிழில் மட்டுமல்ல இந்திய அளவில் ஷாருக்கானை போன்று புகழ்பெற்று விளங்குவதற்கு உரிய அம்சங்களுடன் உள்ள ஒரு ஹீரோவாகத்தான் எனக்கு தெரிகிறார். அவர் இதேபோன்று நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் பட்சத்தில் இந்த திரையுலகில் ஒரு மிக முக்கியமான இடத்தை பிடிப்பது உறுதியாக சொல்கிறேன்” எனப் பாராட்டினார்.

நாயகன் ஹரிஷ் கல்யாண் பேசும்போது, “இந்த படம் நிச்சயம் பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படமாகத்தான் இருக்கும்.. வழக்கமான ஹைடெக் லுக்கில் இருந்து மாறி, இந்த படத்தில் அழுக்கு பையன் தோற்றத்தில் நடித்து உள்ளேன்” எனக் கூறினார்