தீபிகாவுக்கு திருப்தி தரவில்லையா ‘கோச்சடையான்’..?

அவிழ்த்துவிடப்பட்ட பொலிகாளையைப் போல முரட்டுத்தனமான வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது ‘கோச்சடையான்’. இந்தப்படத்தின் வசூலில் எந்த குறையும் சொல்லமுடியாத சிலர், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பட்த்தின் டெக்னிகல் விஷயங்கள் குறித்து தேவையில்லாமல் சில செய்திகளை பரப்பி வருகின்றனர்.

‘கோச்சடையான்’ படத்தில் தீபிகா படுகோனின் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்படவில்லை என்றும் குறிப்பாக தீபிகாவின் தோற்றத்தில் டெக்னிக்கலாக கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் வருத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

அதனாலேயே அவர் ‘கோச்சடையான்’ சம்பந்தப்பட்ட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளவில்லை என்று அந்த செய்திக்கு கண், காது வைத்து பெரிதாக்கினார்கள். ஆனால் தீபிகாவின் தரப்பிலோ இதை கடுமையாக மறுத்துள்ளனர். இப்படிப்பட்ட சரித்திர சிறப்பு வாய்ந்த ஒரு படத்தில் நடித்ததற்காக தீபிகா இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாரே தவிர வருத்தம் என்பதெல்லாம் வீணர்கள் கிளப்பும் வதந்தி தான் என கூறி பதிலடி கொடுத்துள்ளனர்.