அடாத மழையிலும் விடாமல் நடக்கும் இரும்புத்திரை ஷூட்டிங்..!

irumbuthirai shooting

சமீபத்தில் மலையாளத்தில் விஷால் நடித்துள்ள விளான் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்க தற்போது புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘இரும்புத்திரை’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் விஷால். ‘இரும்புத்திரை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

தற்போது சென்னையில் விடாமல் மழை பெய்துகொண்டிருந்தாலும், அதற்கேற்றாற்போல் காட்சிகளை படம்பிடித்து வருகிறது இரும்புத்திரை டீம். தற்போது சென்னையின் முக்கிய பகுதியான ரிச்சி தெருவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு இந்தப்படத்தை திரையிட வேண்டும் என்பதால் முழுவீச்சுடன் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்தப்படம் முழுக்க டிஜிட்டல் குற்றங்களைப் பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சமந்தா நாயகியாக நடித்துவரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக அர்ஜூன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.