ட்ரெண்டை மாற்ற வரும் ‘இறைவி’..!

இன்றைக்கு தமிழ்சினிமாவை பேய் சீசன் விடாமல் கெட்டியாக பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது,.. இதற்கு ஒருவகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் காரணகர்த்தா.. ‘காஞ்சனா’வுக்கு பின் அமைதியாக இருந்த ‘பேய்’ சீசனை மீண்டும் ‘பீட்சா’ மூலமாக தொடங்கிவைத்தவர் அவர்தானே.. ஆக இன்றுவரை ஓயாத இந்த அலையை அப்படியே வேறுபக்கம் திருப்பிவிடும் பொறுப்பும் அவரிடம் தானே இருக்கிறது.

அதனால் தான் தற்போது குடும்பப்பாங்கான ‘இறைவி’ கதையை கையிலெடுத்து தனது முந்தைய இரண்டு படங்களின் சாயல் கொஞ்சம் கூட இல்லாதவாறு படமாக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். வெறுமனே குடும்ப கதை என நினைத்து ரசிகர்கள் யாரும் சுவாரஸ்யம் குறைந்து விடக்கூடாது என்பதனால் தான் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் இந்த முறை இணைந்துள்ளார். ஆக இந்தப்படத்தின் வெற்றி தான் தமிழ் சினிமாவை இன்னொரு ட்ரெண்டிற்கு மாற்றிவிடும் என நம்புவோம்..