3 நாளில் 3 கோடி கலெக்சன்.. டாப் கியரில் விஷ்ணு படம்..!

படத்துல ஒரு சீன் கூட போரடிக்கலைன்னா, அந்தப்படத்துக்கு கூட்டம் வராம என்ன பண்ணும்..? அதுதான் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ‘இன்று நேற்று நாளை’ படம் ஓடுற தியேட்டர்கள்லேயும் இப்போ நடக்குது. ரவிக்குமார் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கிய இந்தப்படத்தில் விஷ்ணு, மியா, கருணாகரன் எல்லாருமே பர்பெக்ட்டா செட் ஆகிருக்காங்க.

அதுமட்டுமல்ல, டைம் மெஷின் கதைங்கிறது குழந்தைகளோட ஏரியா.. அதனால்தான் குழந்தைகள் கூட்டமும் குவியுது என்று தியேட்டர்காரர்களே ரிப்போர்ட் தருகிறார்கள். ஆக படம் வெளியான இந்த 3 நாட்களில் 3 கோடி ரூபாய் வசூலித்து இண்டஸ்ட்ரியை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் சி.வி.குமார் இணைந்து தயாரித்த இந்தப்படத்தை அபி&அபி பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.