நவ-27ல் ‘இஞ்சி இடுப்பழகி’ ; 15௦௦ தியேட்டர்களில் மெகா ரிலீஸ்..!

கடந்த வாரமே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் தான் இஞ்சி இடுப்பழகி’.. ஆனால் அனுஷ்காவின் ருத்ரமாதேவி படம் வெளியானதால் ரசிகர்களின் முழு கவனமும் அந்தப்படத்திற்கே செல்லட்டும் என இந்தப்படத்தின் ரிலீஸை சில நாட்கள் தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி தற்போது வரும் நவ-27ல் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய பிவிபி சினிமாஸ் முடிவு செய்துள்ளது. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப்படத்தை இரண்டு மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 15௦௦ தியேட்டர்களில் மெகா ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

ஸ்லிம் ஆர்யா, பப்ளி அனுஷ்கா காம்பினேஷனில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் உடல் பருமனான தோற்றத்தில் அனுஷ்கா வரும் காட்சிகளுக்காகவே டீசரை பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டிவிட்டது. பிரகாஷ் கொவேலமுடி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சோனல் சௌஹான், பிரகாஷ்ராஜ், பரத், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளார்கள். மரகதமணி இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.