ஆறு கண்டங்களில் ரிலீஸாகும் ஆர்யாவின் படம்..!

Inji-Iduppazhagi
முதன்முறையாக ஆர்யாவின் படம் அண்டார்டிகா தவிர ஆறு கண்டங்களில் ரிலீசாகிறது என்றால் அது தற்போது அவர் நடித்துள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ படமாகத்தான் இருக்கமுடியும்.. வழக்கமான தென்னிந்திய மாநிலங்கள் தவிர்த்து, இந்தியிலும் ரிலீசாகிறது. ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இந்தப்படத்தின் ஹைலைட்டே அனுஷ்கா தனது உடல் எடையை ஏற்றி குண்டுப்பெண்ணாக நடித்துள்ளதுதான்.

பாகுபலி, ருத்ரமாதேவி படங்கள் மூலம் தனது நடப்பின் எல்லையை விருவுபடுத்திய அனுஷ்கா, யாருமே தொடுவதற்கு பயப்படுகிற ஒரு விஷயத்தை, அதாவது உடல் பருமனை கூட்டும் விஷயத்தை இந்தப்படத்திற்காக பண்ணியுள்ளார். காரணம் உடல் பருமனான ஒரு பெண் தனது உடலை ஸ்லிமாக்க எடுக்கும் நடவடிக்கைகள் தான் இந்தப்படத்தின் மையக்கருவே.

அதுமட்டுமல்ல, புற அழகை விட, அக அழகே முக்கியம் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறாராம் இயக்குனர் கே..எஸ்.பிரகாஷ்ராவ். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப்படத்தை இரண்டு மொழிகளிலும் சேர்த்து வரும் நவ-27ல் கிட்டத்தட்ட 15௦௦ தியேட்டர்களில் மெகா ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.