இந்தியா பாகிஸ்தான் என்ன மாதிரியான கதை..?

நான், சலீம் படங்களின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘இந்தியா பாகிஸ்தான்’. இது இரு நாடுகளுக்கிடையேயான கிரிக்கெட் விளையாட்டு பற்றிய படமோ இல்லை, இருநாடுகளுக்கு இடையேயான போர் பற்றிய படமோ இல்லை. இந்தியா பாகிஸ்தான் ரேஞ்சுக்கு சண்டையிட்டுக்கொள்ளும் இரண்டு காதலர்களை பற்றிய கதை தானாம்.

படத்தின் கதாநாயகியாக சுஷ்மா ராஜ் நடித்துள்ளார். பார்ப்பதற்கு ஒரு சாயலில் அனுஷ்கா மாதிரியும் தெரிகிறார். விஜய் ஆண்டனி தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வருவதால், இந்தப்படத்திற்கு அவரிடம் கீபோர்டு பிளேயராக இருந்த தீனா தேவராஜன் என்பவர் தான் இசையமைத்துள்ள்ளார்.

படத்தை ஆனந் என்பவர் இயக்க, அவரது தம்பி ஓம் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். படத்தில் பசுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், நண்டு ஜெகன் என காமெடி பட்டாளமும் உண்டு.. படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேற்று நடத்தியவர்கள், வரும் மே-8ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.