குறும்பட இயக்குனர் அருண் கார்த்திக் படத்தில் மெர்க்குரி நாயகி

super dooper

பரவலான கவனம் பெற்ற ‘லேகா’ என்கிற குறும்படம் மூலம் குறும்படவுலகில் முத்திரை பதித்தவர் ஏகே அதாவது அருண் கார்த்திக் இவரது இயக்கத்தில் உருவாகவுள்ள படம் “சூப்பர் டூப்பர்” . ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் இருவாக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

படத்தின் நாயகனாக துருவா நடிக்கிறார். இவர் ‘ஆண்மை தவறேல் ‘படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக இந்துஜா நடிக்கிறார் . இவர் ஏற்கெனவே ‘மேயாத மான் ‘, ‘மெர்க்குரி’ , ‘பூமராங்’ , ‘அறுபது வயது மாநிறம்’ படங்களின் நாயகியாக நடித்து பரபரப்பாக பேசப்படுபவர். அதுமட்டுமல்ல இதில் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் ஆதித்யா முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

மேலும் ஒரு ரகளையான கதாபாத்திரத்தில் ஷாரா நடிக்கிறார் .இவர் ‘மீசையை முறுக்கு’ , ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ , படங்களில் நடித்தவர் . அது மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் பிரபலமானவர். இப்படி சமூக ஊடகங்களில் புகழ் பெற்ற பலரும் இதில் நடிக்கிறார்கள்

படம் பற்றி இயக்குநர் அருண் கார்த்திக் பேசும் போது, “இது ஒரு முழு நீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது.இந்தப் படம் எல்லாரும் ரசிக்கும் படி இருக்கும். இது வழக்கமான கதை கொண்ட படமல்ல என்பதைப் புரிந்துதான் நாயகன் , நாயகி இருவருமே நடிக்க ஒப்புக் கொண்டார்கள். ” என்கிறார்.

படப்பிடிப்பை இன்று தொடங்கி 45 நாட்களில் முடிக்கும் திட்டத்தோடு மும்முரமாக இருக்கிறது “சூப்பர் டூப்பர்” படக்குழு