தெலுங்கில் நாகார்ஜுனா..! தமிழுக்கு ஜீவா..!!

Nagarjuna - jeeva
பிரகாஷ் கொவேலமுடி இயக்கத்தில், ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடிப்பது தெரியும்… ஆனால் மிக முக்கியமான கேரக்டரில் கெஸ்ட் ரோலில் முன்னணி நடிகர் ஒருவர்.. இல்லையில்லை இருவர் நடிக்க இருக்கிறார்கள்… அதாவது தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் தெலுங்கு வெர்ஷனில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் நாகார்ஜுனா.

அப்படியானால் தமிழுக்கு யார் என்கிற கேள்வி எழத்தானே செய்யும்.. தற்போது அதற்கு விடையாக ஆர்யாவின் ஆருயிர் நண்பன் ஜீவா அந்த கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களில் இருவரும் மாறிமாறி கெஸ்ட் ரோல்களில் நடித்தவர்கள் தான். இப்போது மீண்டும் ஜீவாவின் முறை.