திருமண சென்டிமென்டை கைவிடாத முத்தையா..!

Marudhu Tamil Movie Teaser
‘குட்டிப்புலி’ பட இயக்குனர் முத்தையாவின் டைரக்சனில் விஷால் நடிப்பில் ‘மருது’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.. கிட்டத்தட்ட ஒரே மாதிரி சாயலிலேயே அவரது படங்கள் இருக்கின்றன என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது. தன்னால் கிராமத்து கதைகளை மட்டுமே இயக்க முடியும் என அவரும் கூட சொல்லியுள்ளார்..

பொதுவாக பெரும்பாலான கிராமத்து படங்களில் பெரும்பாலும் நாயகன், நாயகியை கடைசி வரை காதலர்களாகவே காட்டுவார்கள். இன்னும் சிலர் காதலுக்காக போராடி கடைசியில் சோகமோ அல்லது சுமான முடிவையோ தருவார்கள்..

ஆனால் இயக்குனர் முத்தையாவை பொறுத்தவரை படத்தின் நாயகன் இடைவேளை வரை கதாநாயகியை காதலிக்கவேண்டும்.. இடைவேளைக்குப்பின் அவளை திருமணம் செய்துகொண்டு குடும்பஸ்தனாக மாறவேண்டும் என்கிற தனது கொள்கையை தனது மூன்று படங்களிலும் தொடர்ந்து கடைபிடித்து வருவது ஆச்சர்யம் தான்.