‘அஞ்சல’ படத்தில் நட்புக்காக ‘டீ போட்ட’ நட்சத்திரங்கள்..!..!

stars in anjala song
சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருவதோடு தற்போது விமல், நந்திதா நடித்துள்ள அஞ்சலா’ என்கிற படத்தையும் தயாரித்துள்ளார்.. தங்கம் சரவணன் என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் இந்தப்படத்திற்கான ‘டீ போடு’ என்கிற புரமோஷன் பாடல் ஒன்றை சமீபத்தில் யூடியூப்பில் ‘தெறி’க்க விட்டார்கள்.

நம்ம ஊரில் டீ எப்படி தவிர்க்க முடியாத ஒரு பானமாக விளங்குகிறது என டீயின் அருமை பெருமைகளை விளக்கும் இந்தப்பாடலில் என்ன ஸ்பெஷல் என்றால், சிவகார்த்திகேயன், சூரி, சசிகுமார், விஜய் சேதுபதி, ஜீவா, சமுத்திரக்கனி, மொட்ட ராஜேந்திரன் என ஒரு பட்டாளமே இதில் பங்கேற்று நடித்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் திலீப் சுப்பராயன் மற்றும் விமல் இருவரின் நட்புக்காக இந்தப்பாடலில் பங்கேற்றுள்ளனர். வரும் 24ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.