முதல் படத்திலேயே மிரட்டலை பார்த்தவன் நான் ; ரீல் ‘ட்ராபிக் ராமசாமி’ எஸ்.ஏ.சி அதிரடி..!

traffic ramasamy

வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத்தழுவி ‘டிராபிக் ராமசாமி’ என்கிற பெயரிலேயே ஒரு படம் எடுக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் விஜய் விக்ரம் இயக்கும் இந்தப்படத்தில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார் .

இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், ஆகியவரும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் விஜய் ஆண்டனி, குஷ்பூ, சீமான் ஆகியோர் கெளரவதோற்றத்தில் பங்குபெறுகிறார்கள். ஒரு முக்கியமான சக்தி வாய்ந்த அதிரடியான போலீஸ் கமிஷனராக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக வேலைபார்த்த விக்கி எனும் இளைஞர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இந்தப்படத்தில் நடித்ததற்காக உங்களுக்கு மிரட்டல் எதுவும் வந்ததா என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், ‘நான் இயக்கிய முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை’ வெளியானபோதே பல மிரட்டல்களை சந்தித்தவன்.. கலைஞர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, நீதிக்கு தண்டனை என்கிற படத்தை வெளியிட்டேன்.. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இருந்து மறுநாள் ராமாவரம் தோட்டத்திற்கு வரும்படி அழைப்பு வந்தது.. என்ன நடந்திருக்கும் என உங்களுக்கே தெரிந்திருக்கும்.. அதையெல்லாம் பார்த்து வந்தவன் நான்.. மிரட்டல்கள் என்னை ஒன்றும் செய்யமுடியாது” என கூறினார்.