தந்தைக்கு சப்போர்ட் பண்ணும் வரலட்சுமி சரத்குமார்..!

நடிகர் சங்க பிரச்சனையில் சரத்குமாருக்கு எதிராக தொடர்ந்து விஷால் குரல் கொடுத்து வருவது தெரியும் தானே..  இதில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, விஷால் தனது நண்பர் என்பதால் அவருக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளார்  என பரவலாக பேசப்பட்டு வந்தது.. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இது என்ன மாயம் இசை வெளியீட்டு விழாவில் கூட சரத்குமாரின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டபோது,விஷால் பக்கம் தான் ஆதரவாக இருப்பதாக காட்டும் விதமாகத்தான் விழாவில் கலந்து கொள்ளாமல் வரலட்சுமி புறக்கணித்து விட்டார் என்றும் கூட சொன்னார்கள்.

ஆனால் இதுநாள்வரை இவையெல்லாம் குறித்து எந்த பதிலும் வரலட்சுமி சொல்லாததால் குழப்பமே நீடித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான பதிவை இட்டிருந்தார் வரலட்சுமி. அதில், “நான் என்ன நினைக்கிறேன் என உங்கள் இஷ்டப்படி யூகித்துக்கொண்டு எழுத உங்களுக்கு உரிமை இல்லை.. நான் எப்போதும் என் அப்பா பக்கம் தான்” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.