“மசாலா படம் எடுக்குற மந்திரவாதி நான்” – இயக்குனர் ஹரி

 

இயக்குனர் ஹரி படங்கள் என்றாலே நான்ஸ்டாப் ஆக்ஷன் தான்.. எதைப்பற்றியும் யோசிக்க விடாமல் ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே உட்காரவைத்திருக்கும் வித்தை தெரிந்தவர். தற்போது விஷாலை வைத்து அவர் இயக்கிவரும் ‘பூஜை’ படமும் அந்த லிஸ்ட்டில் தான் இருக்கிறது என்கிறார் ஹரி..

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஹரியிடம் நிருபர் ஒருவர் நீங்கள் ஏன் ஒரே மாதிரியாக ஆக்ஷன் படங்களை மட்டும் எடுக்கிறீர்கள்.. வித்தியாசமாக எப்போது படம் எடுப்பீர்கள் என ஒரு கேள்வியை கேட்டார்.. அதற்கு கொஞ்சமும் அசராத ஹரி, “நீங்கள் வித்தியாசமான படம் பார்க்க விரும்புகிறீர்களா..? அல்லது இன்ட்ரெஸ்டிங்கான படம் பார்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்க நிருபர் திகைத்தார்.

“அண்ணே.. வித்தியாசமான படங்கள் எடுக்கத்தான் நம்ம நண்பர்கள் பல பேர் இருக்கிறாங்களே.. வித்தியாசமான படமா பாலா இருக்கார், பிரமாண்டமான படமா ஷங்கர் இருக்கார்.. சமூகத்துக்கு செய்தி சொல்ற படமா அதையும் சொல்லறதுக்கு சிலர் இருக்காங்க.. மசாலா படம் எடுக்குற மந்திரவாதியும் ஒருத்தர் வேணுமுல்ல.. அது நானா இருந்துட்டு போறேண்ணே” என்று கலகலப்பாக பதில் சொன்னார் ஹரி..