திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தங்களது படங்களை குறித்த காலத்தில் ரிலீஸ் செய்ய ஒருபோதும் தயங்கியதே இல்லை. ஆனாலும் சினிமாவில் பருவநிலை மாற்றம் என ஒன்று இருக்கிறதல்லவா..? அதையும் கணித்து தானே களத்தில் கால் வைக்கவேண்டும். இப்போது திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து, ஈராஸ் நிறுவனம் வெளியிடும் ‘இடம் பொருள் ஏவல்’ ஏவல் படத்தை மே-1ஆம் தேதி ரிலீஸ் செய்வதும் அப்படி ஒரு பதுங்கிப்பாயும் திட்டம் தான்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா நடித்துள்ள இந்தப்படத்தை முதலில் மார்ச்-27ல் தான் ரிலீஸ் செய்வதாக பிளான். ஆனால் தொடர்ந்து கொம்பன், உத்தமவில்லன், காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி என பெரிய படங்கள் வெளியாக இருப்பதால் அவற்றின் உக்கிரம் கொஞ்சம் தணிந்தபின் வெளியிடலாம் என்றுதான் மே-1க்கு ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளார்களாம்.